எமது ஆலயத்தில் எதிர்வரும் 25-08-2023 வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத விஷேட பூஜையும் நூற்காப்பு வழங்கலும் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.அன்று காலை 8.00 மணியளவில் வரலட்சுமி விரத விஷேட பூஜை நடைபெறவுள்ளது.
வரலட்சுமி விரதம் சுமங்கலிப் பெண்களும் கன்னிப் பெண்களும் அனுஷ்டிக்கின்ற சிறப்பு மிக்க விரதமாகும்.
பூஜை முடிந்த பிறகு எமது ஆலய குருக்களால் நூற்காப்பு வழங்கப்படும்.
மேற்படி பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் பெண் அடியார்கள் ஆலய கருமபீடத்தில் முன்கூட்டியே தங்களது பெயர்களை பதிவு செய்வதுடன் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
பூஜைக்குரிய கட்டணம் – 200 ரூபா
மேலதிக விபரங்களை ஆலய கரும பீடத்தில் அறிந்து கொள்ளலாம்.
நிர்வாக சபையினர்
தேசிப்பழம் - 1
குங்குமம் - 100 g
சந்தனம் - 100 g
வெற்றிலை - 10
கதலி வாழைப்பழம் - 6
தேங்காய் - 1
பட்டு - 1
மஞ்சள் மா - 100 g
மஞ்சள் தேறு (கட்டி) - 1
பாக்கு சீவல் - 100 g
செம்பு - 1
விளக்கு - 1
தட்டம் - 1
பூ வகைகள்
அரிசி - 1/2 Kg
வாழையிலை - 1
கற்பூரம் - 3
ஊதுபத்தி - 1