நவராத்திரி விரத விஷேட பூஜை – 2023

 வீமன்காமம் வடக்கு அருள்மிகு குருந்தடி இராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தில் எதிர்வரும் 15-10-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி விரத விஷேட பூஜை ஆரம்பமாகின்றது என்பதை அம்பாள் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

23-10-2023 திங்கட்கிழமை சரஸ்வதி பூஜை உற்சவம் நடைபெறவுள்ளது. 24-10-2023 செவ்வாய்க்கிழமை விஜயதசமியுடன்  நவராத்திரி விரதம் முடிவடைகின்றது. 

அன்று மாலை கேதாரகௌரி விரதம் ஆரம்பம்.

நவராத்திரி விரத காலங்களில் தினமும் அம்பாளுக்கு மாலை 04.00 மணிக்கு விஷேட பூஜை நடைபெறும் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

உபயகாரர்கள் விபரம்

15-10-2023 – நவராத்திரி 1ம் நாள் – திரு.வ.க.தில்லைநடராஜா குடும்பத்தினர் 

16-10-2023 – நவராத்திரி 2ம் நாள் – திரு. சண்முகம் கந்தசாமி குடும்பத்தினர் 

17-10-2023 – நவராத்திரி 3ம் நாள் – திரு. வை. இராசரத்தினம் குடும்பத்தினர் 

18-10-2023 – நவராத்திரி 4ம் நாள் – திரு. வைத்திலிங்கம் யோகேஸ்வரன் குடும்பத்தினர் 

19-10-2023 – நவராத்திரி 5ம் நாள் – திரு. கனகரத்தினம் கருணாநிதி குடும்பத்தினர் 

20-10-2023 – நவராத்திரி 6ம் நாள் – திரு. ஆறுமுகம் உருத்திரகுமாரன் குடும்பத்தினர் 

21-10-2023 – நவராத்திரி 7ம் நாள் – திரு. செல்லையா சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் 

22-10-2023 – நவராத்திரி 8ம்நாள் – திரு. கந்தையா பரமேஸ்வரன் குடும்பத்தினர் 

23-10-2023 – நவராத்திரி சரஸ்வதி பூஜை – திரு. சி. நடராசா குடும்பத்தினர்

24-10-2023 – நவராத்திரி– விஜயதசமி – திரு. கந்தசாமி நல்லராசா குடும்பத்தினர் குடும்பத்தினர் 

24-10-2023 செவ்வாய்க்கிழமை – கேதார கௌரி விரதம் ஆரம்பம்


நவராத்திரி விரத விஷேட பூஜைகளில் அடியார்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தரிசித்து அம்பாளின் அருளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்